மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் - பதிவு 15
கவிஞர், நாடகவியலாளர் எனப் பன்முகக் கலை ஆற்றலுள்ளவர். அதோடு கல்விப் புலத்தில் முனைவர், ஆய்வாளர், தலைமையாசிரியராகத் திறம்படப் பணியாற்றுபவர். அந்தோணி லூயிஸ் மத்தியாஸ் என்கிற இயற்பெயர் கொண்டவர் கீரைத் தமிழன் அவர்கள்.
'கனவு தேசம்' இவரது கவிதை நூல். அதனோடு 'தமிழில் சிற்றிதழ்கள்', 'சொல்ல மறந்த தமிழர் வரலாறு', 'மானவர்களுக்கேற்ற எளிய முறையில் தமிழ் இலக்கணம் எழுத்து சொல் பொருள் யாப்பு அணி ஆகிய ஐந்திலக்கணங்கள்', விரைவில் வெளியீட்டு விழா காணப் போகிற 'விடுதலைப் போரில் தமிழ் நாடகங்கள்' என்னும் ஐந்து நூல்களுக்குச் சொந்தக்காரர்.
இன்னும் நிறைய நூல்கள் எழுத வேண்டும் என்று சொல்கிற கீரைத் தமிழனின் விருப்பங்கள் நிறைவேற மனதார வாழ்த்துவோம்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக