வருக...... வருக....... வணக்கம்

பக்கங்கள்

செவ்வாய், 24 டிசம்பர், 2013

 
 
 


அன்புத் தோழர் பசு. கவுதமன் அவர்கள் '.ஜி. கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்' என்கிற அருமையான நூலொன்றினைத் தொகுத்துள்ளார்கள். தஞ்சை, நாகை, திருவாரூர்ப் பகுதியின் ஆற்றல்மிக்க பொதுவுடைமைக் கட்சித் தோழர்களில், தனித்துவமான போராளி தோழர் ஏஜிகே. விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வீரஞ் செறிந்த பல போராட்ட நிகழ்வுகளை மட்டுமல்ல, அன்று களத்தில் இயங்கிய, வரலாற்றில் மறைக்கப்பட்ட அல்லது மறந்துபோன தோழர்களின் பங்களிப்பையும் சேர்த்துப் பதிவு செய்துள்ளது இந்நூலின் சிறப்பு.

வெண்மணி

வரலாற்றின் பக்கங்களில் தகிக்கும் பெரு நெருப்பு. அதை ஒவ்வொருவரும் அவரவர் நோக்கில் எழுதியிருக்கிறார்கள். குருதிப்புனலில் இந்திரா பார்த்தசாரதிக்கு அது ஆண்மையற்றவனின் பாலியல் விகாரம் என்கிற ஊனப் பார்வை இருந்தது. சோலை சுந்தரப் பெருமாளின் 'செந்நெல்' சிபிஎம் பார்வையில் எழுதப்பட்டது. பாரதி கிருஷ்ணகுமாரின் 'இராமையாவின் குடிசை' சிபிஎம்மின் பிரச்சாரப்படமாக்கப் பார்வையிருந்தது. நான் எழுதிய 'கீழைத்தீ' புரட்சிகர எம்எல் கட்சியின் பார்வையில் எழுதப்பட்டது. அதன் வரிசையில் தோழர் பசு. கவுதமனின் இந்நூல், அன்றைய நாட்களில் தந்தை பெரியாரின் தலைமையிலான திராவிடர் கழகத்தின், 'திராவிடர் விவசாயத் தொழிலாளர்கள் சங்க'த்தின் பார்வையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந் நூலின் தொடர்ச்சியாய் "இன்னும் விரிவான - மறைக்கப்பட்ட உண்மைகளும், மறுக்கப்பட்ட நீதிகளுமாய் பச்சைத் தீ - வெண்மணிப் பதிவுகளில் தொடரும்" என்று சொல்லி நூலினை முடிக்கும் நூலாசிரியர் தோழர் பசு. கவுதமன் அவர்களின் அடுத்த பதிவை ஆவலுடன் வாழ்த்துகள் சொல்லி எதிர்நோக்குவோம்.

தோழர்கள் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நூல் இது

வியாழன், 24 அக்டோபர், 2013

 
 
 


 
 
இந்த ரெண்டு படுக்கையில் எது உயர்ந்த படுக்கை ? 

செவ்வாய், 17 செப்டம்பர், 2013




பொதிகைத் தொலைக்காட்சியில் நேற்று பெரியார் படம்.

மீண்டும் ஒரு முறை குடும்பத்தோடு உட்கார்ந்து பார்த்தோம். படம் குறித்த விமர்சனமல்ல இது. வேறொரு விஷயம்.

படத்தில் வற்புறுத்தி பொட்டுக் கட்டும் காட்சி. பொட்டுக் கட்டிய தேவதாசிப் பெண்ணாக நடிகை சொர்ணமால்யா. கண்ணீருடன் மனம் ஒப்பாமல் வேறுவழியின்றி வற்புறுத்தலுக்கு இணங்கி நடனமாடுவார். இது காட்சி.

பிறகு எப்டீம்மா தேவதாசிமுறை மீண்டும் வர வேண்டும் என்று நாட்டிய நாடகமாட முடிகிறது? ஓகோ. அது நடிப்பு. காசுக்காகப் பண்றது. எங்களுக்குத்தாம்மா இதெல்லாம் புரிய மாட்டேங்குது. எல்லாத்தையும் உண்மையின்னு நெனச்சு நம்பிப்புடுறோம்.
 
 

புதன், 17 ஜூலை, 2013





கச்சத்தீவை மீட்க கோரி கருணாநிதி மனு: சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்.

"தலைவா. எங்கள வச்சுக் காமெடி கீமெடி பண்ணலயே?"



இதற்கு மேலும் தேக்கி வைத்தால் அணை இடிந்து போகும் என்று வடித்து விட்ட உபரி நீர் 24 .மி..அடி ஏற்கெனவே தரப்பட்டு விட்டதாம். மீதமுள்ள 10 .மி..அடி நீர்.... இன்னும் கொஞ்சம் வலுவாக மழை பெய்யாமலா போகும்? உபரி நீர் தேங்காமலா போகும்? தந்து விடுகிறோம் மீதி 10 .மி..அடி தண்னீரை. இது இன்று தில்லியில் நடைபெற்ற காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டச் செய்தி. காவிரி நீர் என்பது தமிழகத்தின் உரிமை. இந்த உரிமை என்பது குறித்து ஒரு புரிதல் வேண்டும். தெளிவு வேண்டும். உண்மையில் இது போன்ற அதிக மழைப் பொழிவுக் காலத்தை விட பற்றாக்குறைக் காலத்தில் நமக்கு எவ்வளவு பங்கீடு என்பதில்தான் இருக்கிறது நமது உரிமை.

புதன், 9 ஜனவரி, 2013

அனைவரையும் அழைக்கிறோம்






கால காலமாய்த்
தொடரும் யுத்தம்.

மதங்கள்...... 
சாதிகள்.....
வர்க்கங்கள்.....

மனித குலத்தை 
எத்தனைதான் முன்னுக்கு இழுத்துச் செல்ல
பாடுபட்டாலும்.....

பின்னுக்கு இழுக்கும்
பிற்போக்கு சக்திகளுக்கு
எதிரான.....
  
தொடரும்
கால கால யுத்தத்தின்
ஒரு கண்ணியாய்.....

தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகத்தின்
திருச்சி நிகழ்விற்கு
உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்.

வியாழன், 3 ஜனவரி, 2013

கவிதை நூல் வெளியீட்டு விழா

 
 

 
அன்பான தோழமைக்கு,
வணக்கம்.
எதிர்வரும் சனவரி 6ம் நாள்
அகண்ட காவிரியும் ஆடு தாண்டும் காவிரியும் என்ற
எமது கவிதை நூல் வெளியீட்டு விழா.
அழைப்பிதழை இணைத்துள்ளேன்.
அவசியம் வருகை தர வேண்டுகிறேன்.
நன்றி.
தோழமையுள்ள........
பாட்டாளி