என் வீடு எனக்கே
- பாட்டாளி
என் வீட்டிற்கு
குடும்பத் தலைவன் நான்.
இன்று காலை
என் வீட்டில்
யாரோ உள் நுழைந்து
படுத்திருப்பதாக மனைவி சொன்னார்.
அவர் படுத்துக் கிடந்தால்
கிடக்கட்டும்
ஆனால் நான்தான்
என் வீட்டிற்கு குடும்பத்
தலைவன்.
இன்று மதியம்
யாரோ ஒருவர்
வீட்டினுள் நுழைந்து
சமைத்துக் கொண்டிருப்பதாகச்
செய்தி வந்தது.
ஆனாலும் என்ன?....
நான்தான்
நான்தான்
என் வீட்டிற்கு குடும்பத்தலைவன்.
