பொதிகைத் தொலைக்காட்சியில் நேற்று பெரியார் படம்.
மீண்டும் ஒரு முறை குடும்பத்தோடு உட்கார்ந்து பார்த்தோம்.
படம் குறித்த விமர்சனமல்ல இது. வேறொரு விஷயம்.
படத்தில் வற்புறுத்தி பொட்டுக் கட்டும் காட்சி. பொட்டுக்
கட்டிய தேவதாசிப் பெண்ணாக நடிகை சொர்ணமால்யா. கண்ணீருடன் மனம் ஒப்பாமல்
வேறுவழியின்றி வற்புறுத்தலுக்கு இணங்கி நடனமாடுவார். இது காட்சி.
பிறகு எப்டீம்மா தேவதாசிமுறை மீண்டும் வர வேண்டும் என்று
நாட்டிய நாடகமாட முடிகிறது?
ஓகோ. அது
நடிப்பு. காசுக்காகப் பண்றது. எங்களுக்குத்தாம்மா இதெல்லாம் புரிய மாட்டேங்குது.
எல்லாத்தையும் உண்மையின்னு நெனச்சு நம்பிப்புடுறோம்.
