கடந்த 05.10.2022 அன்று தோழர் மீ.த. பாண்டியன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் 'என்ன சம்பந்தம் தோழர் பாட்டாளி?' என்று புதிய மனிதன் இதழ் குறித்து பதிவு ஒன்றை இட்டிருந்தார். அதற்கான விளக்கங்களும் முறையான பதில்களும்.
முதல் பதிவு
(தோழர் மீ.த. பாண்டியனுக்கு மட்டும். பொது வெளிக்கு அல்ல)
அன்பிற்குரிய தோழர் பாண்டியன் அவர்களுக்கு, வணக்கம். புதிய மனிதன் இதழ் மீதான விமர்சனம் எப்போதும் எவரிடமிருந்தும் வரவேற்கத்தக்கது. விமர்சன ஏற்புப் பக்குவமும் புதிய மனிதன் ஆசிரியக் குழுவிற்கு உள்ளது. ஆனால், புதிய மனிதன் மீதான உங்கள் ஒவ்வாமையை, காழ்ப்பை பொது வெளியில் பகிர்ந்திருக்கிறீர்கள். என்னிடம் கேட்டிருந்தால் தகுந்த ஆதாரபூர்வமான சான்றுகளோடு விளக்கியிருப்பேன். அதை விடுத்துப் பொது வெளியில் நீங்கள் பகிர்ந்து கொண்டதால் அனைவருக்கும் விளக்கம் அளிக்கிற நிலையை நீங்களே ஏற்படுத்தி விட்டீர்கள்.
இப்போது பாருங்கள். நீங்கள் இணைத்துக் குறிட்ட தோழர்களில் பலர், தமக்கும் இதற்கும் எந்தவிதமான சம்பந்தமுமில்லை. எங்கள் ஒப்புதலின்றி இணைத்துள்ளார். அதை நான் ஏற்கவில்லை என்று எமக்குச் செய்திகள் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் உங்கள் பொதுவெளிப் பகிர்தலின் லட்சணம். என்ன செய்வது? அவரவர்கள் செயல்களே அவரவர்களுக்கான எதிர்வினை. அந்தத் தோழர்களுக்கு நான் இவ்வாறு பதில் அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.
"அமைப்பிற்கிடையேயான கருத்து வேறுபாடுகளை அந்தந்த அமைப்புத் தோழர்களிடையே பேசிட வேண்டும். பொது வெளியில் அல்ல என்கிற குறைந்தபட்ச தெளிவும் புரிதலும்கூட மூத்த தோழர்களுக்கும் இல்லை என்பதுதான் வேதனை. விமர்சனங்களை உள்வாங்கிக் கொண்ட தொடரும் செயல்பாடுகளே அதற்குப் பதில்" என்று பதிலனுப்பிக் கொண்டிருக்கிறேன்.
எனினும் உங்களுக்கு ஒரு வாய்ப்புத் தருகிறேன். திருத்திக் கொள்வதற்கு. இது சரியான பதிவு அல்ல. எனவே நீக்குகிறேன். வருந்துகிறேன் என்று சொல்லி நீங்கள் இணைத்துக் குறியிட்டுள்ள அதே 82 பேர்களை மீண்டும் இணைத்துக் குறியிட்டு அதே வெளியில் பதிவிட வேண்டுகிறேன். இல்லையெனில், எமது விளக்கத்தை பொது வெளியில் முன் வைக்க நேரிடும். அப்படி முன் வைக்கிறபோது வெளிப்படும் பல உண்மைகள், பலப் பல உண்மைகள், உங்களைத் தர்ம சங்கடத்திற்குள்ளாக்கி கேலிக்குரியதாக்கிவிடும். அது எமக்கு ஏற்புடையதல்ல. உவப்பானதுமல்ல. மேலும் பொது எதிரிக்கு வலு சேர்க்கும் தவறான உதாரணமாகியும் விடும். உங்கள் பொது வாழ்வின் அர்ப்பணிப்பின் மீதான மரியாதையால்தான் இதனைத் தெரிவிக்கிறேன். இது மிரட்டலல்ல. முன் வைப்பு. உங்களுக்கு வழங்கப்படும் வாய்ப்பு. எனவே, சரியான பதிவு அல்ல. நீக்குகிறேன். வருந்துகிறேன் என்று சொல்லி நீங்கள் இணைத்துக் குறியிட்டுள்ள அதே 82 பேர்களை மீண்டும் இணைத்துக் குறியிட்டு அதே வெளியில் பதிவிட வேண்டுகிறேன். இல்லையெனில்... உரிய விளக்கங்கள் தயவு தாட்சண்யமின்றி பல உண்மைகள் தகுந்த சான்றுகளோடு நீங்கள் முன் வைத்த அதே பொது வெளியில் வைக்கப்படும். அப்படியொரு விரும்பத்தகாத நிலையை உருவாக்கிக் கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன். நன்றி.
தோழமையுள்ள...
பாட்டாளி
பொறுப்பாசிரியர். புதிய மனிதன்
இதற்குப் போதிய கால அவகாசம் கொடுத்தும், திருத்திக்கொள்ள வாய்ப்புக் கொடுத்தும், பதிவு சரியானதல்ல எனக் குறிப்பிட்டு நீக்கவோ அதற்கு வருத்தந் தெரிவிக்கவோ இல்லாத நிலை தொடர்வதால், எமது புதிய மனிதன் நிலை குறித்து தெளிவுபடுத்துவது கட்டாயமாகிறது. அவசியமாகிறது. எனவே வேறுவழியின்றிப் பொதுவெளியில் அது தொடர்கிறது.
இரண்டாவது பதிவு
அன்பிற்குரிய தோழர் பாண்டியன் அவர்களுக்கு, வணக்கம். புதிய மனிதன் இதழ் மீதான விமர்சனம் எப்போதும் எவரிடமிருந்தும் வரவேற்கத்தக்கது. விமர்சன ஏற்புப் பக்குவமும் புதிய மனிதன் ஆசிரியக் குழுவிற்கு உள்ளது. ஆனால், புதிய மனிதன் இதழ் மீதான அறிவு நாணயமற்ற, முதிர்ச்சியற்ற, சிறுபி்ள்ளைத்தனமான உங்கள் ஒவ்வாமையை, காழ்ப்பை பொது வெளியில் பகிர்ந்திருக்கிறீர்கள். என்னிடம் கேட்டிருந்தால் தகுந்த ஆதாரபூர்வமான சான்றுகளோடு விளக்கியிருப்பேன். அதை விடுத்துப் பொது வெளியில் நீங்கள் பகிர்ந்து கொண்டதால் அனைவருக்கும் விளக்கம் அளிக்கிற நிலையை நீங்களே ஏற்படுத்தி விட்டீர்கள்.
பொதுவெளிக்கு என்று வந்தபின் எமது நிலைபாடுகளைச் சொல்ல வேண்டுமல்லவா?
முதலில் என்ன சம்பந்தம் என்று கேட்டிருக்கிறீர்கள். மார்க்சிய லெனினிய அரசியலை ஏற்று இந்தக் கணம்வரை, இனியும்... எழுத்திலும் களத்திலும் களமாடி வருகிற பல்லாயிரக்கணக்கான தோழர்களில் நானும் ஒருவன். எமது தலையங்கத்தில் தெளிவாகவே சொல்லியிருக்கிறேன்.
'கம்யூனிஸ்ட் கட்சி (மாலெ) மக்கள் விடுதலை' அமைப்பு இம் மண்ணில் உறுதிப்பட்டு அதன் அரசியற் வேலைகள் தொடர்ந்து நடந்து வந்தபோது, 'மக்கள் விடுதலை' என்னும் அரசியல் இதழை வாய்ப்பிருக்கும் போதெல்லாம் நடத்திவந்தது. அதைப்போலவே முழுக்க முழுக்க கலை இலக்கியப் படைப்புகள் மட்டுமே கொண்ட இலக்கிய இதழ் ஒன்றை நடத்திட வேண்டும் என்று முடிவெடுத்தது. அதனை வரலாற்றுத் தொடர்ச்சியான 'புதிய மனிதன்' என்கிற பெயரிலேயே நடத்துவது என்றும் முடிவெடுத்தது. அதற்குத் தோழர் பாட்டாளியைப் பொறுப்பாசிரியராகக் கொண்டு முழு
நடத்துவது என்றும் 'கம்யூனிஸ்ட் கட்சி (மாலெ) மக்கள் விடுதலை' முடிவெடுத்தது. (தலையங்கத்திலிருந்து... ப.5)
ஆக, நான் தேர்ந்தெடுத்து இயங்கி வருகிற கட்சி எனக்கிட்ட வேலை. எமது கட்சி எமக்கிட்ட கட்டளை. அதை செயல்படுத்திக் காட்டுவதுதான் ஒரு கட்சி ஊழியனின் கடமை. அதைச் செய்து வருவதால்தான் சொல்கிறேன். வரலாற்றுத் தொடர்ச்சி என்று. "நான்தான்." "நான்.. நான்... நான் மட்டுமே..." என்கிற சுயவெறித் தலைக்கனம் பிடித்தலைகிற பண்பு எமக்கு என்றும் இருந்ததில்லை. இன்றும் சொல்கிறேன். இனியும் சொல்வேன். மார்க்சிய லெனினிய அரசியலின் வரலாற்றுத் தொடர்ச்சிதான் நான். உங்களைக் கேட்டுக் கொண்டுதான் செய்யவேண்டும் என்பதற்கு தாங்கள் ஒன்றும் மார்க்சிய லெனினிய அரசியலுக்கு அத்தாரிட்டி அல்லவே. அப்படியான மடமையை, போதனையை இனியாவது கை விடுங்கள்.
இரண்டாவது... இந்த வேலையை எனக்குக் கொடுத்தது யார் தெரியுமா? பாவம். எதுவொன்றும் தெரியாமல், தெரிந்து கொள்ளாமல், "நான்தான்." "நான்.. நான்... நான் மட்டுமே..." என்று சுய தலைக்கனம் பிடித்தலையும் உங்களுக்கு எங்கே தெரியப்போகிறது? எதுவொன்றையும் தெரியாமல் இருப்பது தவறல்ல. தெரிந்துகொள்ள மறுப்பதுதான் தவறு. உரிய முறையில் கேட்டிருந்தால் நானே தெளிவாக எடுத்துச் சொல்லியிருப்பேன். போகட்டும். இப்போது சொல்கிறேன்.
இந்தப் பணியை எனக்குக் கொடுத்தது யார் தெரியுமா? 80களில் அன்றைய கட்சியின் அதிகார பூர்வமான மத்தியகுழுவின் பிரச்சாரத்துறை (CPD - Central Propaganda Department} உறுப்பினரும், தமிழ்நாட்டின் மாநில பிரச்சாரத்துறை (SPD - State Propaganda Department) பொறுப்பாளர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? அப்போது கட்சியின் அதிகாரப் பூர்வமான செய்தித் தொடர்பாளர் (Spokesperson) யார் என்று தெரியுமா? நான் எப்படி 2002வரை சிபிஎம்மிலும் தமுஎசவிலும் இருந்தேனோ, இயங்கினேனோ, அதைப்போலவே பாவம் நீங்களும் திராவிடர் கழகத்திலிருந்து கட்சிக்குள் அடியெடுத்து வைத்த துவக்க காலம். தேவகோட்டை, மதுரை என கட்சிக்குள் அடியெடுத்து வைத்த துவக்கநிலைக் காலம். அன்றைய கட்சியின் மத்தியக் குழு முடிவுகளுக்கும் உங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது. அதுதானே உண்மை. அந்தப் பழைய வரலாற்றையெல்லாம் வெளியில் நேர்மையாகச் சொல்ல மாட்டீர்கள். அல்லது "நான்தான்." "நான்.. நான்... நான் மட்டுமே..." என்ற வெற்று சுய அகங்காரக் குணம் அதை வெளிப்படுத்தாது. போகட்டும். விசயத்திற்கு வருவோம். அன்றைய கட்சியின் அதிகார பூர்வமான மத்தியகுழுவின் பிரச்சாரத்துறை உறுப்பினரும், தமிழ்நாட்டின் மாநில பிரச்சாரத்துறை பொறுப்பாளரும், அன்றைய கட்சியின் அதிகாரப் பூர்வமான செய்தித் தொடர்பாளரும், அவர்களிருவர் உள்ளிட்ட, கட்சியின் தலைமைக்குழு எடுத்த முடிவு அது. எமக்கிட்ட பணி அது. என்ன சம்பந்தம் என்று கேட்டீர்களே அந்த சம்பந்தம் இதுதான். கட்சி அதிகாரப் பூர்வமாக எமக்கு இட்ட பணிதான் புதிய மனிதன் பொறுப்பாசிரியர் பணி.
அடுத்து... கட்சி எனக்கிட்ட பணியைத் துவக்குவதற்கு முன்னர் நான் எடுத்த முதல் காரியம் எது தெரியுமா? பொறுப்பாசிரியர் தோழர் இன்குலாப் மறைந்து விட்டதால் அவரைத் தொடர்பு கொள்ள இயலாது. ஆனால், புதிய மனிதன் இதழின் துவக்ககால ஆசிரியர் தோழர் மதிவாணன் அவர்கள் இன்றும் கட்சிப் பணிகளில் தொடர்ந்து ஆற்றலாக இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார். அவரிடம் உரிய முறையில், முறைப்படி தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவிக்க, "ஆகா... நல்ல விசயம். தாராளமாக எடுத்துச் செய்யுங்கள். புதிய மனிதனின் வரலாற்றுத் தொடர்ச்சியை உறுதிப் படுத்துங்கள்". கவனியுங்கள். "புதிய மனிதனின் வரலாற்றுத் தொடர்ச்சியை உறுதிப் படுத்துங்கள்" என முற்று முழுவதும் வரலாற்றுக்கு உரியவர்கள் மகிழ்ச்சியோடு, முழு மனதோடு, தனது சம்மதத்தைத் தெரிவித்ததோடு, வாழ்த்துகளும் சொன்னார். உங்களைப் போன்று எதற்கும் சம்பந்தமில்லாமல் ஒரு ஓரஞ் சாரத்தில் நின்று கொண்டிருந்துவிட்டு, வாய்ப்புக் கிடைக்கும்போது 'லபக்' கென்று அபகரிக்கும் செயலல்ல இது. முற்று முழுவதும் வரலாற்றுக்கு உரியவர்கள், அதன் சொந்தக்காரர்கள், மகிழ்ச்சியோடும், முழு மனதோடும், சம்மதத்தோடும், வாழ்த்துகளோடும் ஏற்றுக் கொண்ட பணிதான் இந்த புதிய மனிதன் பொறுப்பாசிரியர் பணி.
கூடுதல் தகவல் ஒன்று சொல்லட்டுமா? மக்கள் கவிஞர் தோழர் இன்குலாப் அவர்களின் இறுதிக் காலத்தில் அவரைப் பராமரிக்க எமது கட்சியிலிருந்து நியமிக்கப்பட்ட தோழர்தான் ஊரப்பாக்கம் நடராஜன் அவர்கள். அவரிடம் தோழர் இன்குலாப், "புதிய மனிதனை யாராவது எடுத்து நடத்தினால் நன்றாக இருக்கும். அதை உங்கள் மக்கள் விடுதலை செய்ய வேண்டும்" என்று அவரிடம் தமது விருப்பத்தை வேண்டுகோளாக்கி வலியுறுத்தியுள்ளார். அப்போதுதான் எமது கட்சிக்கே ஆம். இப்படியொரு வேலையை நிச்சயம் கையிலெடுக்க வேண்டும். புதிய மனிதனை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற சிந்தனையே கருக் கொண்டது. இதற்கு நேரடிச் சாட்சி தோழர் ஊரப்பாக்கம் நடராஜன். அவரை உங்களோடு பேசச் சொல்லவா?
மட்டுமல்ல. தோழர் மதிவாணன் அவர்களின் சம்மதத்தை உறுதிப்படுத்தும் விதமாக அவரின் 'அவஸ்தை' என்கிற சிறுகதையோடுதான் எனது பொறுப்பிலான முதல் புதிய மனிதன் இதழே வெளியானது. ஆக, எனக்கு எல்லாவிதத்திலும் சம்பந்தமும் இருக்கிறது. இப்போது கேட்கிறேன். பகிரங்கமாகக் கேட்கிறேன். உங்களுக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது பாண்டியன்? நீங்கள் யார்? நீங்கள் என்ன புதிய மனிதன் ஆசிரியரா? அல்லது சிறப்பாசிரியரா? அன்றி பொறுப்பாசிரியரா? அன்றி தோழர்கள் ரமணன், டேனியல் போன்று குறைந்தபட்சம் ஆசிரியக் குழுவிலாவது இருந்திருக்கிறீர்களா? புதிய மனிதன் என்று இதழ் பார்த்தவர்களுக்கும், அதனை வாசித்தவர்களுக்கும், அந்த இதழில் பின்னாட்களில் உங்கள் தனிப்பட்ட நிறுவனமான 'தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்' குறித்த செய்தி ஒன்று வந்திருப்பதால், அதற்கு உரிமையாளன் நான். என்னைக் கேட்டுக் கொண்டுதான் எதுவும் செய்ய வேண்டும் என்று உரிமை கொண்டாட முடியும் என்றால்... எனக்குக் கூடத்தான் ஆனந்த விகடன் இதழ் தெரியும். ஏன்? எமது கட்டுரைகள், கவிதைகள் என எமது படைப்புகள் அதில் வந்திருக்கிறது. அதனால் நான்தான் ஆனந்த விகடன் உரிமையாளன். என்னைக் கேட்டுக் கொண்டுதான் எதனையும் செய்யவேண்டும் என்று சொன்னால்... வாயால் சிரிக்க மாட்டார்கள் பாண்டியன். பாவம். பரிதாபகரமாக இருக்கிறது உங்கள் இழி நிலைமை.
சரி. வரலாறையாவது ஒழுங்காகச் சொல்கிறீர்களா? என்றால் அதுவும் கிடையாது. முதலில், "1987டன் நின்று போனது" என்று சொல்லியிருக்கிறீர்கள். அடுத்து, "80களில் வந்த புதிய மனிதன் தொடர்ச்சியானதாக எண்ணிக்கையிட்டு அக் 1 இதழ் எண் 96" எனவும் எழுதியிருக்கிறீர்கள். ஒவ்வொன்றுக்காகப் பதில் சொல்கிறேன். 87டன் நிற்கவில்லை இதழ். அதற்குப் பிறகும் "ஜனவரி மார்ச் 1991 காலாண்டிதழ் இதழ் 2" எனக் குறிப்பிட்டு வந்துள்ளது. அந்த இதழின் முன் அட்டைப் படம் புதிய மனிதன் அக் 1 இதழ் எண் 96ல் ப.5ல் உள்ளது. இனியாவது காழ்ப்பு உவப்பற்று திறந்த மனதோடு, கண் கொண்டு பார்க்கவும். ஆக, நீங்கள் சொல்வதுபோல 87டன் நின்று போகவில்லை. அதற்குப் பிறகும் தொடர்ச்சியற்று, வரிசையற்று, அவ்வப்போது இடப்பெறும் வரிசை எண்களோடு, மாத இதழாக, காலாண்டிதழாக அதற்குத்தகவான வரிசை எண்களோடு வந்து கொண்டுதான் இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
அடுத்து முதலில் வந்தது 'மனிதன்'. பிறகுதான் 'புதிய மனிதன்'. மனிதன் உருவான வரலாறு தெரியுமா? நமது மரியாதைக்குரிய முன்னோடித் தோழர், முன்னத்தி ஏர் மறைந்த பிவிஎஸ் அவர்கள்தான் புதிய மனிதனுக்கும் முந்தைய 'மனிதன்' இதழுக்கு மறைந்த மக்கள் கவிஞர் தோழர் இன்குலாப்பை அழைத்து வந்தவர். துவக்கத்தில் இருந்த மனிதன் இதழ் சிலகாலம் வந்து, பின் காலம் தாழ்த்தி, தொடர்பறுந்து, கடைசியில் நின்றே போனது. பிறகு மீண்டும் முயற்சியெடுத்தது அன்றைய கட்சியின் அதிகார பூர்வமான மத்தியகுழுவின் பிரச்சாரத்துறை உறுப்பினரும், தமிழ்நாட்டின் மாநில பிரச்சாரத்துறை பொறுப்பாளரும், அவர் இன்றும் வரலாற்றுச் சாட்சியமாக நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அவரும். மறைந்த தோழர் பிவிஎஸ் அவர்களிருவரும் இணைந்து கவிஞர் இன்குலாப்போடு அமர்ந்து சில பல சுற்றுகள் பேசி, தோழர் மதிவாணனை ஆசிரியராகக் கொண்டு, பழைய பெயரான மனிதன் வேண்டாம், புதிய மனிதனாக உருவெடுக்கட்டும் என்று மனிதன் புதிய மனிதனானான். இப்படியாக 1985 மே மாதம் தனது முதல் இதழின் மூலம் புதிய பயணத்தைத் துவங்கினான் புதிய மனிதன். இதுவெல்லாம் வரலாறு.
இதழின் இலச்சினை பற்றியெல்லாம் குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த இலட்சினை யாரால் வடிவமைக்கப்பட்டது தெரியுமா? இலட்சினையின் கருதுகோளுக்குச் சொந்தக்காரர் யாரென்று தெரியுமா? அது எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதாவது தெரியுமா? போகட்டும். புதிய மனிதன் வரலாறு குறித்து எழுதும்போது, இதையெல்லாம் நிச்சயம் உரிய முறையில் உரிய சான்றுகளோடு பதிவு செய்வேன். நல்லது. மீண்டும் விசயத்திற்கு வருவோம்.
தலையங்கம் இவ்வாறு கூறுகிறது.
"தொடர்ச்சியாக சில காலம் வெளிவந்து, பிறகு இடைஇடையே நின்று, பிறகு மீண்டும் தொடர்ந்து, கடைசியில் ஒருவாறு நின்றே விட்டான் புதிய மனிதன்".
தலையங்கம் ப. 5
அதன்படி நீண்ட நெடுங்காலங் கழித்து, 23.08.2020லிருந்து எம்மைப் பொறுப்பாசிரியராகக் கொண்டு, வார இதழாக மீண்டும் வடிவெடுத்தான் புதிய மனிதன். இம்முறை அச்சு இதழாக அல்லாமல், மின்னூடக அறிவியல் வடிவத்தைப் பயன்படுத்தி, மின்னிதழாகக் காலத்திற்கேற்ற புதிய வடிவில், நவீன அறிவியற் தொழில் நுட்பத்தில், கலை இலக்கியப் படைப்பாளிகளோடு தனது பயணத்தைத் தொடர்ந்தான் புதிய மனிதன். அது உங்கள் உள்பட நிறைய தோழர்களுக்கு அனுப்பப்பட்டது. அதன் பிறகு வாரா வாரம் நாள் தவறாது, பிசகாது தொடர்ந்து வந்து கொண்டிருந்து. அத்தனை இதழ்களும் புலன வழியே உங்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. நீங்களும் அதைத் திறந்து படித்ததற்கான விருப்பக் குறியும் பதிவாகி உள்ளது. இத்தனையும் தெரிந்தும் அதை உள்ளுக்குள் மறைத்துக்கொண்டு, உங்களுக்கே உரிய காழ்ப்பில், குரோதத்தில், "சில மாதங்களுக்கு முன் தொடங்கினார்" என்று எழுதியிருக்கிறீர்கள். 2020 என்பது என்ன சில மாதங்களுக்கு முன்னரா பாண்டியன்?
ஆக, 23.08.2020லிருந்து 01.05.2021வரை வார இதழாகத் தொடர்ந்து, 22 வாரங்கள் (ஐந்தரை மாதங்கள்) இடைவிடாது குறித்த காலத்தில் ஒரு வாரங்கூடத் தவறாது தொடர்ந்து வீறு நடை போட்டான் புதிய மனிதன். பிறகு அதிலும் சிறிய இடைவெளி. ஓராண்டு காலம் இடைவெளி. தனது பலவீனங்களை உணர்ந்து.. உதறி... பலங்களைப் பெருக்கிக் கொண்டு, இதோ மீண்டும் புதிய பொலிவுடன், புதிய மென்பொருள் துணையுடன், புதிய வடிவமைப்புடன், நவீன கலை இலக்கியப் படைப்பாளர்களின் பங்களிப்போடு மீண்டும் புதிய மனிதன் 01.05.2022 முதல் மாத இதழாக, ஒவ்வொரு மாதத் துவக்க நாளில் ஒரு நாள் கூட தவறாது, பிசகாது, அழகாக, ஆழமாகப் பீடு நடை போட்டுத் தொடர்ந்து கொண்டிருக்கிறான் புதிய மனிதன்.
தலையங்கம் (ப. 5 - 6)
இப்போது வரும் இதழ் எண் வரிசையென்பது முழுக்க முழுக்க எங்கள் பொறுப்பில் மட்டுமே வந்து கொண்டிருக்கும் இதழ் எண் வரிசை. வேண்டுமென்றால் எங்கள் பொறுப்பில் வந்த 96 இதழ்களையும் ஒட்டு மொத்தமாக உங்களுக்கு அனுப்பத் தயார். ஏற்கெனவே உங்களுக்கு அனுப்பப்பட்டு நீங்களும் பார்த்து அதற்கு விருப்பக் குறி இட்டதுதான். இருந்தாலும் மீண்டும் ஒரு முறை உங்களுக்காக எங்கள் பொறுப்பில் வந்த 96 இதழ்களையும் அனுப்பி வைக்கிறோம். அதைப் பார்த்துவிட்டு பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டியதில்லை. அப்படியான குறுகிய, குரூர புத்தியும் எங்களுக்கில்லை. தவறை உணர்ந்து கொண்டால் போதுமானது. இனியும் ஒவ்வாமையோடு, காழ்ப்போடு, சுய வெறுப்போடு, பொது வெளியில் பதிவிடாமல் இருந்தால் போதும். அப்படிப் பதிவிட்டாலும் கவலையில்லை. உடனுக்குடன் பதில் தர என்றும் தயாராய் இருக்கிறது புதிய மனிதன் ஆசிரியர் குழு.
பாட்டாளி
பொறுப்பாசிரியர், புதிய மனிதன்.
குறிப்பு.
உங்களுடைய பதிவில் புதிய மனிதன் இதழ் குறித்து சாக்கிட்டுக் கொண்டு வரையறை மீறி காழ்ப்போடு குரோதத்தோடு ஒவ்வாமையோடு வேறு சிலவும் எழுதியிருக்கிறீர்கள். ஆனால் நான் வரையறை தாண்டாமல் மீறாமல் புதிய மனிதன் இதழ் குறித்து மட்டுமே விளக்கம் அளித்துள்ளேன். வேறு சிலவுக்கும் பதில் வேண்டுமென்றால் எல்லாவற்றுக்கும் பதில் தரத் தயாராய் இருக்கிறேன். மறைந்த தோழர் பிச்சை முத்துவை மனதளவில் முதன்முதலில் கொன்றழித்த பண்பாடுள்ளவர்கள்(?) உட்பட.
நகல்
உங்கள் மின் அஞ்சல்
உங்கள் புலனம்
எமது வலைப் பூ. http://pattalipakkam.blogspot.com/

