இதற்கு மேலும் தேக்கி வைத்தால் அணை இடிந்து போகும் என்று வடித்து விட்ட உபரி நீர் 24 ஆ.மி.க.அடி ஏற்கெனவே தரப்பட்டு விட்டதாம். மீதமுள்ள 10 ஆ.மி.க.அடி நீர்.... இன்னும் கொஞ்சம் வலுவாக மழை பெய்யாமலா போகும்? உபரி நீர் தேங்காமலா போகும்? தந்து விடுகிறோம் மீதி 10 ஆ.மி.க.அடி தண்னீரை. இது இன்று தில்லியில் நடைபெற்ற காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டச் செய்தி. காவிரி நீர் என்பது தமிழகத்தின் உரிமை. இந்த உரிமை என்பது குறித்து ஒரு புரிதல் வேண்டும். தெளிவு வேண்டும். உண்மையில் இது போன்ற அதிக மழைப் பொழிவுக் காலத்தை விட பற்றாக்குறைக் காலத்தில் நமக்கு எவ்வளவு பங்கீடு என்பதில்தான் இருக்கிறது நமது உரிமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக