வருக...... வருக....... வணக்கம்

பக்கங்கள்

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

கவிதை வெளி



மனித முகங் கொண்ட.......

ஆனந்தக் கூத்தாடுகின்றன
ஆக்டோபஸ்கள்.


புதிதாய் முளைத்திருக்கும்
மனித முகங் கொண்ட
முகமூடி கண்டு.


இனி
வளைக்கும் சிரமமில்லை
கரங்களுக்கு.
வாயைத் திறந்து வைத்தாலே
போதும்.


ஆக்டோபஸின்
தரகு முதலைகள்
பெருத்து வீங்கிப் போயிருந்த
தனது உடம்புகளை
சுருக்கிக் காட்டி
ஓலமிட்டன.


இரக்கம்
முளைத்துக் கிளைத்திட
தேற்றுதல்
மொழி உதிர்த்தன
நரிகள்.


தரகு முதலைகளின்
ஆக்டோபஸ்களின்
வஞ்சங்களைப்
பால பாடமாகப்
புரிந்து கொண்டிருந்த
காவல் சிங்கங்களோ
வால்களை
இடுக்கில் ஒடுக்கிக் கொண்டு
இளித்தன.


பொலிவேறியது
மனித முகங் கொண்ட
உள்ளூர் உண்ணிகளுக்கு.

கருத்துகள் இல்லை: