வருக...... வருக....... வணக்கம்

பக்கங்கள்

ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

பகிர்வு வெளி......

"கரூர் மாவட்டத்தில் அண்மையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஓர் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் சுமார் 20 நாள்களாகக் குடிநீர் வரவில்லை.
இது குறித்து பொதுமக்கள் ஊராட்சித் தலைவரிடம் முறையிட்டும் அவர் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதோடு பொதுமக்களுக்கு சரியான முறையில் பதிலும் அளிக்கவில்லை. பொறுத்திருந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் பொதுமக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, ஊராட்சித் தலைவர் வர வேண்டுமென கோரிக்கை விடப்பட்டது. ஆனால் அவரோ தான் ஒன்றும் சும்மா ஜெயித்து விடவில்லை. ஓட்டுக்கு பணம் கொடுத்துத்தான் வெற்றி பெற்றுள்ளேன். எனவே அவர்கள் கூப்பிடும் போதெல்லாம் என்னால் வர முடியாது என்று பதிலளித்தாராம்.
இதனால் விரக்தியுற்ற பொதுமக்கள் தங்களின் போராட்டத்தை வேறு வழியில்லாமல் போலீசாரின் உறுதி மொழியை ஏற்று முடித்துக் கொண்டனர்."
'திருப்பித் தாக்கும் பண ஆயுதம்'
எஸ்.முத்துக்குமார்
தினமணி நாளிதழ் நடுப்பக்க கட்டுரை
27.03.2010 சனிக்கிழமை

ஒரு சமூகத்தையே குற்றமயச் சமூகமாக்கி வைத்திருக்கும் 'திருமங்கல பார்முலா'க் காரர்களுக்கு இந்த பகிர்வு வெளி சமர்ப்பணம்.

1 கருத்து:

ottadai.blogspot.com சொன்னது…

மெருகூட்டுங்கள்...
வாழ்த்துக்கள்