நாம் இருப்பது என்ன 21ம் நூற்றாண்டிலா?
அடிமைக் காலத்திலா?
ஒரு புறம்...... அணு சக்தி, நியூட்ரினோ, நானோ தொழில் நுட்பம், கம்ப்யூட்டர், இன்டர்நெட், ஈமெயில் என..... ஏன்? திருவரங்கம் அரங்கநாத சுவாமிகளே வலைத்தளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் இந்த அறிவியல் தொழில் நுட்ப அபரிமித வளர்ச்சி காலத்தில்.....
மற்றொரு புறம்...... இருண்ட புறமாக, பழைய அடிமைக்கால மிச்ச சொச்சமாக, மனிதனை மனிதன் பல்லக்கில் தூக்கிச் சுமந்து செல்லும் மடமைப் பழக்க வழக்கத்தைக் கொண்ட திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மறுபுறம்.
திருவரங்க கோயிலில் வேதபாராயணம் வாசிப்பது, பிரபந்தங்களை இசைப்பது, போன்ற தொழில்களைச் செய்யும் வேதவியாச பட்டர் குடும்பத்தினர், பராசர பட்டர் குடும்பத்தினர், அறையர் குடும்பத்தினர் ஆகியோர்களை கோயிலிலிருந்து அவரவர் வீடு வரை பல்லக்கில் தோள் கடுக்கச் சுமந்து சென்று, வீடுகளில் இறக்கி விடுவது ஆண்டாண்டு கால பரம்பரைப் பழக்க வழக்கமாம். நாம் இருப்பது என்ன 21ம் நூற்றாண்டிலா? அல்லது அடிமைக் காலத்திலா?
அடுக்காத பழக்க வழக்கம் இது. மனிதனை மனிதன் இழிவுபடுத்தும் மூடப் பழக்க வழக்கம் இது என மனித நேயங் கொண்ட, மனித உரிமை நோக்கு கொண்ட, கோயிலின் இணை ஆணையர் அவர்கள், "திருக் கோயில் வழிபாடு செய்யும் இறைவனைத்தான் பல்லக்கில் தூக்கிக் கொண்டு செல்வது முறையாகும். அவ்வாறின்றி பல்லக்கில் மனிதனை மனிதனே தூக்கிக் கொண்டு செல்வது தவிர்க்க வேண்டிய செயலாகும்". எனவே, இந்த மனிதகுல விரோத மூடப் பழக்க வழக்கத்தை ரத்து செய்ய முயற்சி எடுத்திருக்கிறார்.
உண்மையிலேயே மனிதராய் இருப்பவர்கள் மனமுவந்து வரவேற்கும் முயற்சி இது. ஆனால், மேற்படி பட்டர் கும்பல்களோ இணை ஆணையர் மீது வழக்குப் போட்டு, பத்து லட்ச ரூபாய் நட்ட ஈடு கோரியுள்ளார்கள்.
மனித நேயங் கொண்ட, மனித உரிமை நோக்கு கொண்ட, முற்போக்கு சனநாயக சக்திகள் ஒன்று சேர்ந்து, இணைந்து நின்று, பிற்போக்குவாத பார்ப்பன சனாதன சதிகளை முறியடிக்க, தொடரும் இந்த அடிமை முறையை, இழி செயலை ஒழித்துக் கட்ட, கரம் கோர்க்க வேண்டிய தருணம் இது.
வரவேற்கிறோம். வரவேற்கிறோம்.
திருவரங்கம் கோயிலில் மனிதனை மனிதன் பல்லக்கில் தூக்கிச் செல்லும் அடிமை முறையை ரத்து செய்யும் முயற்சியை வரவேற்கிறோம்.
கண்டிக்கிறோம். கண்டிக்கிறோம். வன்மையாகக் கண்டிக்கிறோம்.
வழக்கு, நட்ட ஈடு என்ற பெயரில் பூச்சாண்டி காட்டும் வேத வியாச பட்டர் உள்ளிட்ட பட்டர் கும்பல்களை கண்டிக்கிறோம்.
சனநாயக சத்திகளே ஒன்று திரள்வோம்.
பிற்போக்குவாத பார்ப்பன சனாதன (அ)தர்மத்தை முறியடிப்போம்.

3 கருத்துகள்:
ayya idukai arumai. thodarungal vaazhththukkal
http://pagalavan.in/
intha thalaththikku ungal katturaikal vara thodarpu kollavum
rashikart@gmail.com
நன்றி
கருத்துரையிடுக